தனது மனைவி ஸ்ருதியுடன் விசாரணைக்கு வந்த மாதம்பட்டி ரங்கராஜ்... ஜாய் கிரிசில்டா செய்த செயல்
மாதம்பட்டி ரங்கராஜ்
மாதம்பட்டி ரங்கராஜ், தமிழ் சினிமாவில் ஒருசில படங்கள் நடித்தவர்.
சினிமாவில் வெற்றியை காண முடியவில்லை என வருந்தாலும் தனது தெரிந்த சமையல் தொழிலை கையில் எடுத்து அதில் மிக விரைவிலேயே வெற்றியையும் கண்டவர்.
சமையல் தொழில் அதிக கவனம் செலுத்தியவர் எந்த ஒரு பிரபலத்தின் நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என எடுத்தாலும் அதில் இவரது சமையல் தான் அதிகம் இருந்தது.
சமையல் தொழிலில் பிஸியாக இருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மிகவும் பேமஸ் ஆனார். ஆனால் கடந்த சில வாரங்களாக சமையலை தாண்டி அவரது பெயர் இன்னொரு விஷயத்தில் அடிபடுகிறது.
மனைவியுடன் ரங்கராஜ்
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜை மறுமணம் செய்ததாகவும், தான் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தனது இன்ஸ்டாவில் அறிவித்தார். பின் சில வாரங்களில் ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
திருமணம் ஆன ஆதாரத்தை எல்லாம் இன்ஸ்டாவில் வெளியிட்ட வண்ணம் இருந்தார். மேலும், கடந்த 1.5 ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம்.
நான் அவரோடு வாழணும், என் குழந்தைக்கு அவர் தான் அப்பா, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மகளிர் ஆணையத்திலும் அவர் புகார் அளிக்க இன்று மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகியுள்ளார். இருவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
