ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்
குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமீபத்தில் பாலியல் புகார் அளித்து இருந்தார்.
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டார் என மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவர் புகார் கூறி இருந்தார். கர்பத்தை கலைக்கச்சொல்லி அவர் தன்னை தாக்கியதாகவும் புகாரில் கூறி இருந்தார்.
மேலும் புகார் கொடுத்து இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் போலீஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாய் கிரிசில்டா கூறி இருக்கிறார்.
12.5 கோடி நஷ்டம்.. மாதம்பட்டி போட்ட வழக்கு
இந்நிலையில் ஜாய் கிரிசில்டா தன் மீது தொடர்ந்து பேட்டிகளில் புகார் கூறி வருவதால் தான் நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா என்ற கேட்டரிங் நிறுவனத்திற்கு 12.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் மாதம்பட்டி பாகசாலா கேட்டரிங் நிறுவனத்தை தொடர்பு படுத்தி பேச தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கூறி இருக்கிறார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் பல கோடி இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க உத்தரவிட்டு இருக்கிறது.