பல வருடத்திற்கு முன்பே.. மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் மனைவி போட்டுடைத்த உண்மை
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் பிரபல கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் குக்கிங் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாய்கிரிசில்டா என்ற ஆடை வடிவமைப்பாளருடன் இரண்டாம் திருமணம் நடைபெற்றது. திருமண அறிவிப்பு உடன் தான் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஜாய்கிரிசில்டா அறிவிப்பு வெளியிட்டு எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார்.
மேலும் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி தற்போதும் இன்ஸ்டாகிராமில் "ரங்கராஜின் மனைவி" என்று தான் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் அவரிடம் இருந்து இவர் விவாகரத்து பெற்றுவிட்டு தான் இரண்டாம் திருமணம் செய்தாரா என்கிற சந்தேகமும் எழுந்தது.
அதற்கு அவர் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
பல வருடங்கள் முன்பே..
இந்நிலையில் தற்போது மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவி இன்ஸ்ட்டாவில் புது பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் தாங்கள் பல வருடங்களாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறியிருக்கிறார்.
"நான் விளக்கம் அளிப்பதற்காக சொல்கிறேன். சில பயணங்கள் அமைதியாக தான் தொடங்கும். ஆனால் நம்பிக்கையால் வளரும். நாங்கள் கணவன் மனைவியாக எங்கள் பயணத்தை சில வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டோம். இந்த வருடம் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அந்த பதிவு இதோ.


Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
