போட்டோ, வீடியோ காட்டி மிரட்டியே திருமணம்.. ஜாய் கிரிசில்டா குறித்து ரங்கராஜ் பரபரப்பு அறிக்கை
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் பற்றி கடந்த சில மாதங்களாக செய்தியாக இருக்கிறது.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து என்னை ஏமாற்றிவிட்டார், என் குழந்தைக்கு அப்பா அவர்தான் என ஒப்புக்கொள்ள வேண்டும் என புகார் அளித்தார்.
அந்த வழக்கில் மாதம்பட்டி ரங்கராஜ் என்னை காதலித்து திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா அண்மையில் அறிவித்தார்.

ரங்கராஜ் அறிக்கை
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன்.

கமிஷன் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போது, ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது BMW காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யையும் செலுத்த வேண்டும் என்றும் கோரினார்.
நான் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை.
அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.