மதராஸி இதுவரை தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
மதராஸி
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி எப்போது அமையும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, கிடைத்த படம்தான் மதராஸி. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வந்தது.

அன்றில் இருந்து இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளாக பார்த்து வருகிறோம். கலவையான விமர்சனங்கள் படத்தின் வசூலை சற்று பாதித்து இருந்தாலும் கூட தமிழகத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழக வசூல்
இந்த நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மதராஸி திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் 10 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 54.4 கோடி வசூல் செய்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் மதராஸி உட்பட 9 திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan