மதராஸி படம் நான்கு நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மதராஸி
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த மதராஸி படம் இதுவரை நான்கு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும்போதும் அப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருவோம்.
அந்த வகையில் இப்படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர், விக்ராந்த், பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.
பாக்ஸ் ஆபிஸ்
கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், கலவையான விமர்சனங்களும் படத்தின் மீது வைக்கப்பட்டது. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் சிவகார்த்திகேயன் படம் என்றால் மக்கள் அதற்கு தனி வரவேற்பு கொடுப்பார்கள்.
அந்த வகையில் மதராஸி படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் சிறந்த ஓபனிங் கிடைத்துள்ளது. இந்த நிலையில், நான்கு நாட்களில் உலகளவில் மதராஸி திரைப்படம் ரூ. 70 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனிவரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
