மதராஸி படத்தில் நடிக்க நடிகை ருக்மிணி வசந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ருக்மிணி வசந்த்
கன்னடத்தில் வெளிவந்த சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை ருக்மிணி வசந்த். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இதனை தொடர்ந்து ருக்மிணி வசந்த் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி நடித்திருந்தார்.
நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில கலவையான விமர்சனங்களும் வந்துள்ளது. ஆனால், மதராஸி படத்தில் ருக்மிணி வசந்த் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இப்படத்தின் மூலம் இன்னும் பல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.
ருக்மிணி வசந்த் சம்பளம்
மதராஸி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள நடிகை ருக்மிணி வசந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக இவர் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.