அட்வான்ஸ் புக்கிங்கில் மதராஸி படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மதராஸி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.
மேலும், துப்பாக்கி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் வித்யுத் ஜாம்வல் இப்படத்தில் வில்லனாக நடிக்க பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 5ம் தேதி உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. மதராஸி படத்தின் அட்வான்ஸ் புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது.
அட்வான்ஸ் புக்கிங்
இந்த நிலையில், இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 15 லட்சம் மதராஸி படம் வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக ரிலீஸுக்கு முன் மிகப்பெரிய தொகையை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.