டாப் நடிகருக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் மாதவன்.. அதுவும் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கிலா?
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் லூசிபர். இப்படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இப்படத்தில் ஹீரோவாக தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.
காட் ஃபாதர் என தலைப்பு வைத்துக்கிருக்கும் இப்படத்தை, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான மோகன் ராஜா இயக்கி வருகிறார்.
மேலும் இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில், நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் மாதவன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.