மாதவனை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்! அடுத்த படத்திலேயே அவர் கொடுத்த மாஸ் பதிலடி

By Parthiban.A May 05, 2022 05:10 PM GMT
Report

நடிகர் மாதவன் தற்போது ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பாப்புலர் ஆன ஒருவர். அவரது அடுத்த படமான ராக்கெட்ரி இந்திய சினிமா மட்டுமின்றி உலக அளவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாதவன் தற்போது அதிகம் மதிக்கப்படும் ஹீரோவாக இருக்கலாம், ஆனால் அவர் ஆரம்பகாலத்தில் ஒரு படம் பிளாப் ஆனதால் அசிங்கப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் பற்றி தற்போது தற்போது தெரியவந்திருக்கிறது.

மாதவன் அலைபாயுதே ஹிட் ஆன பிறகு என்னவளே என்ற படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் நடிக்க இருந்த படத்தின் தயாரிப்பாளர் அவருக்கு பெரிய சம்பளம் எல்லாம் தர முடியாது என கூறி இருக்கிறார்.

மாதவனை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்! அடுத்த படத்திலேயே அவர் கொடுத்த மாஸ் பதிலடி | Madhavan Humiliated A Producer

"என் நடிப்பு, அழகிற்கு தான் சம்பளம் தருகிறார்கள் என நினைத்தேன், ஆனால் என் முந்தைய படம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதா" என கூறி கோபத்துடன் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம் மாதவன்.

அதன் பின் ரன் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து இருக்கிறார் மாதவன். அதே தயாரிப்பாளர் மீண்டும் இவரை தேடி வர 'நான் கேட்கும் சம்பளத்தை உங்களால் தர முடியுமா?' என கேட்டு, அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு ஒரு தொகையை சம்பளமாக கேட்டு இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US