55 வயதை எட்டிய நடிகர் மாதவன்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
மாதவன்
அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் மாதவன். இதை தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், ரன், அன்பே சிவம், ஆயுத எழுத்து, யாவரும் நலம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

இதன்பின் தமிழில் பெரிதும் ஹிட் தராமல் இருந்த மாதவனுக்கு விக்ரம் வேதா ப்ளாக் பஸ்டர் வெற்றியை தேடி தந்தது. தமிழை தவிர ஹிந்தியிலும் பல ஹிட் படங்களை மாதவன் கொடுத்துள்ளார். இவ்வளவு ஏன், நடிகராக வலம் வந்த இவர் ராக்கெட்ரி படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பட்டையை கிளப்பி தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் மாதவனின் பிறந்தநாள் இன்று. தனது 55வது பிறந்தநாளை கொண்டாடும் மாதவனுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 115 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri