தமிழ் பேசுவேன் ஆனால், மொழி சர்ச்சை குறித்து மாதவன் கொடுத்த அதிரடி பதில்
மாதவன்
நடிகர் மாதவன், சாக்லெட் பாயாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போதும் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார். இடையில் கேப் விட்டவர் பின் இறுதிச்சுற்று படத்தின் மூலம் தனது புதிய இன்னிங்ஸை தொடங்கினார்.
அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வருபவர் கடைசியாக டெஸ்ட் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.
அதிரடி பதில்
இந்நிலையில், மொழி சர்ச்சை குறித்து நடிகர் மாதவன் பகிர்ந்த விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " தனிப்பட்ட ரீதியாகவும், பல்வேறு மொழி படங்களில் நடிக்கும் போதும் எனக்கு மொழி ஒருபோதும் சவாலானதாக இருந்ததே இல்லை.
பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் பற்றி அறிந்து கொள்வதால் அது என் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது. நான் தமிழ் பேசுவேன், இந்தி பேசுவேன், கோலாப்பூரில் படித்துள்ளேன்.
நான் மராத்தி மொழியும் கற்றுக் கொண்டேன். எனவே மொழி தொடர்பாக எனக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டதில்லை" என்று தெரிவித்துள்ளார்.