மாதவன் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு ககுடியேற இது தான் காரணமா!
நடிகர் மாதவன் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர்.
இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் மாறா என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது, மேலும் இவர் நடிப்பில் Decoupled என்ற சீரிஸும் வெளியாகி இருந்தது.
இதனிடையே நடிகர் மாதவன் தனது குடும்பத்துடன் மும்பை வசித்து வந்த நிலையில் தற்போது துபாய்யில் குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது இதற்கான காரணமும் தெரியவந்துள்ளது, அதன்படி மாதவன் மகன் வேதாந்த் சர்வேதேச நீச்சல் வீரராக உள்ளார். 16 வயதாகும் அவரின் மகன் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தயாராகி வருகிறார்.
அவர் பயிற்சி எடுக்க மும்பையில் உள்ள நீச்சல்குளங்கள் அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டு இருப்பதால், மாதவன் அவரின் மகனின் பயிற்சிக்காக துபாய்யில் குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri