சத்தமே இல்லாமல் பெரிய சாதனை நிகழ்த்திய நடிகர் மாதவனின் மகன்- வாழ்த்தும் ரசிகர்கள்
தமிழ் சினிமா ரசிகர்களால் சாக்லெட் பாய் நடிகர் என்று கொண்டாடப்பட்டவர் நடிகர் மாதவன். சினிமாவில் கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர் அந்த இமேஜை உடைத்து மிகவும் அழுத்தமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தார்.
பல வெற்றி, தோல்விகளையும் சந்தித்தார். இப்போது மாதவன் தேர்வு செய்து நடித்துவரும் படங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல ரீச் பெறுகின்றனர்.
இப்படி மாதவன் படங்கள் மூலம் மக்கள் மனதை வென்றுவர அவரது மகன் விருதுகள் பெற்று மக்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் ஒரு இந்திய நீச்சல் வீரர், இதுவரை நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம், விருதுகள் பெற்றுள்ளார்.
அண்மையில் பெங்களூரில் நடந்த 47th Junior National Aquatic Championships 2021ல் நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு வேதாந்த் 7 பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்த சந்தோஷ செய்தி வெளியாக ரசிகர்கள் அவருக்கு மனதார வாழ்த்து கூறி வருகிறார்கள்.