வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க.. நடிகர் மாதவனை திட்டிய மனைவி! என்ன ஆச்சு?
நடிகர் மாதவனுக்கு என ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பாப்புலரான நடிகராக இருந்து வருகிறார் அவர். தற்போது ராக்கெரி நம்பி விளைவு என்ற படத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை வரலாறு தான் அந்த கதை.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகர் மாதவன் அவ்வவ்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று தான்.
அப்படி மாதவன் சமீபத்தில் சட்டை இல்லாமல் ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார். அதற்கு இணையத்தில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஆனால் வீட்டில் அவரது மனைவி அவரை கடிந்துகொண்டாராம்.
"வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோங்க" என திட்டினாராம். இதை மாதவனே தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.