நடிகை மதுபாலாவின் இரு மகள்களையும் பார்த்துள்ளீர்களா - அப்படியே அம்மாவை போலவே இருக்கிறார்களே
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அழகன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா.
அதன்பின் வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன், செந்தமிழ்செல்வன் உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
இந்நிலையில் நடிகை மதுபாலா கடந்த 1999ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு அமயா மற்றும் கெயா என இரு மகள்கள் உள்ளனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை மதுபாலா, சமீபத்தில் தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், " அட, நடிகை மதுபாலாவின் மகள்களா இது. அப்படியே அம்மாவை போலவே இருக்கிறார்களே " என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..