யாரை பற்றியும் மோசமாக பேசாதீங்க- இந்திரஜா திருமணத்தில் கண்ணீர் விட்ட மதுரை முத்து மனைவி
மதுரை முத்து
விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மனதில் மிகப்பெரும் இடத்தை பிடித்தவர்கள் மதுரை முத்து, ரோபோ ஷங்கர்.
இவர்கள் இருவருமே கலக்கப்போவது யாரு முதல் சீசனில் கலந்துகொண்டு 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்தார்கள். ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று டாப் காமெடி நடிகராக வளர்ந்துவிட்டார்.
மதுரை முத்துவும் மக்களிடம் நல்ல ரீச் பெற்றுவிட்டார், விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். தற்போது புதியதாக தொடங்கப்பட்ட அதுஇதுஎது நிகழ்ச்சியிலும் கலக்க இருக்கிறார்.
இந்திரஜா திருமணம்
இந்நிலையில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா திருமணம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடந்தது.
இதில் பல திரைப்பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். மேலும், இந்த திருமணத்திற்கு மதுரை முத்து குடும்பத்துடன் வர, அங்கு அவருடைய மனைவி மைக் பிடித்து மிக எமோஷனலாக பேசினார்.

பிடிக்காத உறவு, அதை செய்து தான் ஆக வேண்டும்- விவாகரத்து பற்றி பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா
அதில், யார் யாரையும் பற்றி தவறாக பேசாதீர்கள், எங்கள் வீட்டில் எந்நேரமும் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்காது.
நாங்கள் சிரிக்க வேண்டுமென்றால் ரசிகர்களாகிய உங்கள் கையில் தான் அது உள்ளது, அதனால் தவறாக யாரையும் பேசாதீர்கள் என எமோஷ்னலாக பேசியதோடு கண்ணீரும் விட்டுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
