மதுரை முத்துவை காண வேறொரு மாநிலத்தில் இருந்து வந்த ரசிகை... நெகிழ்ச்சி சம்பவம், வீடியோ இதோ
மதுரை முத்து
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமானவர் மதுரை முத்து.
இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆக அசத்தப்போவது யாரு, ஞாயிறு கலாட்டா, குத் வித் கோமாளி என சின்னத்திரையில் வலம் வருகிறார். இதுதவிர வெளிநாடுகளிலும் ஏராளமான காமெடி நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.
யார் மனதையும் புண்படுத்தும்படி ஜோக் செய்யாமல் நிஜமாகவே கடி ஜோக் செய்து எல்லோரையும் சிரிக்க வைத்து வருகிறார். அண்மையில் இவர் தனது முதல் மனைவி மற்றும் அம்மாவிற்கு கோவில் கட்டுவதாக தெரிவித்திருந்தார்.
ரசிகை
இந்த நிலையில் மதுரை முத்து தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதுஎன்னவென்றால் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரை ஒரு கேரள மூதாட்டி முத்த மழை பொழிந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி பிஜேபி ‘பி’ டீம் தான் - கட்சியில் இருந்து விலகிய நாதக நிர்வாகி குமுறல் IBC Tamilnadu
