ஆபாச உடை அணிந்து கணவரை அபகரிக்க பார்க்கும் பெண்.. மதுரை முத்து 2ம் மனைவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
நடிகர் மதுரை முத்து விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். மேலும் அவர் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் காமெடியாக பேச கூடியவர்.
மதுரை முத்து தற்போது தனது சொந்த ஊரில் மறைந்த முதல் மனைவி, அப்பா, அம்மா ஆகியோருக்கு கோவில் ஒன்றை கட்டி இருக்கிறார். விரைவில் அதற்கு கும்பாபிஷேகம் செய்ய இருக்கிறார். மேலும் அந்த இடத்தில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றையும் கட்டப்போவதாக தெரிவித்து இருக்கிறார்.
மனைவி வெளியிட்ட வீடியோ
மதுரை முத்துவின் முதல் மனைவி சாலை விபத்தில் இறந்தபிறகு அவர் நீத்து என்ற டாக்டரை திருமணம் செய்துகொண்டார். அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி இருக்கிறது.
சில பெண்கள் ஆபாசமாக உடை அணிந்து, தங்கள் வயதை குறைத்து காட்டி ஆண்களை இழுக்கிறார்கள். இப்படி கணவரை திருட பார்ப்பவர்களிடம் இருந்து உஷாராக கணவரை பாதுகாத்து கொள்ளுங்கள் என அவர் கூறி இருக்கிறார்.

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
