விஜய் பிறந்தநாளுக்கு மதுரை ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்! போட்டோ படுவைரல்
நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தற்போது ஜூன் 22 தளபதியின் பிறந்தநாளை கொண்டாட தயராகி வருகிறார்கள். இதன் தொடக்கமாக தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து இருக்கிறது.
இந்த படத்திற்கு வாரிசு என பெயர் சூட்டி இருக்கும் நிலையில் தற்போது போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் விஜய் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பேனர் போஸ்டர் என கொண்டாட தொடங்கிவிட்டார்கள். அதில் மதுரை விஜய் ரசிகர்கள் சிலர் ஒட்டி இருக்கும் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
'ஒற்றை தலைமையே' என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள். தற்போது அதிமுக-வில் ஒற்றை தலைமை தொடர்பாக சிக்கல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் அதை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan