விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. புரொமோ இதோ
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.
அதாவது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த தொடர் முடிவுக்கு வரும் என சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் கோபி கூறியிருந்தார்.
சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என மக்களுக்கு தெரிய ஆரம்பித்ததில் இருந்து சீரியலில் நடிப்பவர்கள் நிறைய பதிவுகள் போட்டு வருகிறார்கள்.
புதிய தொடர்
பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வர புதிய சீரியலை களமிறக்க விஜய் டிவி தயாராகிவிட்டார்கள்.
அதாவது மகளே என் மருமகளே என்ற சீரியல் தான் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது, இது தெலுங்கு ஒளிபரப்பான Maguva O Maguva என்ற சீரியலின் ரீமேக்காம்.
இதில் நீ நான் காதல் சீரியல் புகழ் வர்ஷினி, ரேஷ்மா, அவினாஷ், நவீன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த சீரியலின் புதிய புரொமோ, நாயகன் என்ட்ரியுடன் வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,