விடாமுயற்சி படத்தில் அஜித்தின் அறிமுக காட்சி இப்படி தான் இருக்கும்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி.
துணிவு படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து அஜித்தின் படம் வெளிவருவதால், இப்படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விடாமுயற்சி படத்தின் ரிலீசுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் மகிழ் திருமேனி தொடர்ந்து பல்வேறு சேனல்களுக்கு interview கொடுத்து வருகிறார்.
இயக்குநர் ஓப்பன் டாக்
அதில் ஒரு Interview-வில் பேசிய இயக்குநர் மகிழ் திருமேனி, விடாமுயற்சி படத்தில் அஜித்தின் அறிமுக காட்சி எப்படி இருக்கும், இப்படத்தில் அவர் எப்படி நடித்துள்ளார் என்பது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "மாஸான அறிமுக காட்சி இப்படத்தில் அஜித்திற்கு கிடையாது. பன்ச் வசனங்கள் இல்லை. மாஸ் ஆக்ஷன் காட்சிக்கான பில்டப்பும் இல்லை. உங்களை போல், என்னை போல் ஒரு சாதாரணமான மனிதராக இப்படத்தில் அஜித் நடித்துள்ளார்" என கூறியுள்ளார்.

நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா IBC Tamilnadu
