மாற்றப்பட்ட ஏகே 62 இயக்குனர்.. ரூ. 220 கோடி பட்ஜெட், மாஸ் கூட்டணி
மாற்றப்பட்ட இயக்குனர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்த படம் ஏகே 62. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருந்த இப்படத்திலிருந்து திடீரென இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டதாக தகவல் வெளிவந்தது.
[
விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இப்படத்தில் இயக்குனராக கமிட்டாகியுள்ளார் என கூறப்பட்டது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.
ஏகே 62வின் புதிய இயக்குனர்
இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது என தெரிவிக்கின்றனர். இப்படத்தின் கதை கேட்ட அஜித் குமார் மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருந்த படத்திற்காக ரூ. 105 கோடி சம்பளமாக வாங்கவிருந்த அஜித், தற்போது மகிழ் திருமேனி படத்திற்காக மாபெரும் சம்பளம் வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் பட்ஜெட்
படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ. 220 கோடி என்றும் இப்படம் வருகிற தீபாவளி வெளியாகும் என்றும் கூறுகின்றனர். விரைவில் அஜித் - மகிழ் திருமேனி படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏகே 62வில் இருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 63 படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேஷியாவில் எந்த படம் அதிக வசூல்.. வாரிசு-சா? இல்லை துணிவு-வா

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri
