அஜித் படத்தை அடுத்து மாஸ் நடிகருடன் கூட்டணி வைக்கும் மகிழ் திருமேனி.. யாருடன் தெரியுமா?
துணிவு படத்திற்கு அடுத்து அஜித் நடிக்கவிருக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் ஷூட்டிங் மே மாதம் இறுதிக்குள் தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ் நடிகருடன் கூட்டணி?
இந்நிலையில் அஜித் படத்தை இயக்குவதற்கு முன்பு மகிழ் திருமேனி நடிகர் சிம்பு வைத்து படத்தை இயக்கவிருந்தாராம். இந்த படத்தை AGS தயாரிக்க இருந்தார்களாம்.
இப்படத்தை குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போது தான் மகிழ் திருமேனிக்கு அஜித்தின் 62 வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.
விடாமுயற்சி படத்தை முடித்த பிறகு சிம்புவை வைத்து மகிழ் திருமேனி இயக்குவார் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

பள்ளி பருவத்தில் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் நயன்தாரா.. இதோ புகைப்படம்!