விக்னேஷ் சிவனுக்கு பதில் AK 62 இயக்கப்போவது இவர்தான்? புது கூட்டணியில் இணையும் அஜித்
AK 62
துணிவு படம் நல்ல வசூல் ஈட்டி இருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படமான AK62 மீது தான் ரசிகர்களின் கவனம் தற்போது திரும்பி இருக்கிறது. விக்னேஷ் சிவன் அந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் வெளியேறுவதாக தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.
இருப்பினும் லைகா நிறுவனமோ அல்லது அஜித் தரப்போ இது பற்றி எந்த விளக்கமும் தற்போது வரை வெளியிடாமல் தான் இருக்கின்றனர்.
மகிழ் திருமேனி உடன் கூட்டணி?
இந்நிலையில் தற்போது AK 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக புது தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கியவர் தான் மகிழ் திருமேனி என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இது பற்றி அதிகாரபூர்வ தகவல் வந்தால் தான் உறுதியாகும்.
வனிதா தான் இனி ராதிகாவா? பாக்கியலட்சுமி சீரியல் பற்றி பரவும் செய்திக்கு தயாரிப்பாளர் விளக்கம்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
