மகுடம்: திரை விமர்சனம்

Report

விஷால் முதல் முறையாக நடித்து இயக்கியிருக்கும் மகுடம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

மகுடம்: திரை விமர்சனம் | Magudam Movie Review

கதைக்களம்

சென்னையில் மெடிக்கல் ரெப்ரெசென்டடிவ் வேலை பார்க்கும் கிருபாகரன் (விஷால்), மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால், கார் இருப்பதாக மாமனாரிடம் பொய் சொல்லி திருமணம் செய்த கிருபாகரன், எப்படியாவது ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என முயற்சிக்கிறார்.

இதற்கிடையில் விசாகப்பட்டினத்தில் துறைமுகத்தை காட்டியாலும் லிங்கப்பாவிடம், தைவானில் இருந்து சரக்கு கப்பல் ஒன்று வருவதாகவும் அதனை இறக்கி தர வேண்டும் என்றும் மூவர் கோரிக்கை விடுக்கின்றனர்.

மகுடம்: திரை விமர்சனம் | Magudam Movie Review

அதை செய்தால் கமிஷனாக ரூ.1000 கோடி கிடைக்கும் என்று அவர்கள் கூறினாலும், லிங்கப்பா அந்த சரக்கை நானும் இறக்க மாட்டேன், வேறு யாரையும் இறக்கவும் விடமாட்டேன் என்று எச்சரித்து அனுப்புகிறார்.

அதே சமயம் புது கார் வாங்கும் முயற்சியில் அவமானங்களை சந்திக்கும் கிருபாகரன், பயன்படுத்தப்பட்ட BMW கார் ஒன்றை வாங்குகிறார். அதில் அவர் குடும்பத்துடன் ஊட்டிக்கு பயணிக்க அங்கே ஒரு கும்பல் அவரை கொல்ல பின்தொடர்கிறது.

மகுடம்: திரை விமர்சனம் | Magudam Movie Review

மேலும், மற்றொரு கும்பல் அங்கு வர அவர்களும் கிருபாகரன் குடும்பத்தை கொல்ல துரத்துகிறார்கள். கிருபாகரனை கொல்ல ஏன் முயற்சிக்கிறார்கள்? அவருக்கும் லிங்காவுக்கு என்ன சம்பந்தம்? கப்பலில் என்ன சரக்கு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

இயக்குநர் ஆக வேண்டும் என்பது தன்னுடடைய 32 ஆண்டு கனவு கூறிய விஷால், இந்த படத்தின் மூலம் அதை நிறைவேற்றியிருக்கிறார். ஆனால், இயக்குநர் வேலையை அவர் வெற்றிகரமாக முடித்தாரா என்பதே இப்படத்தில் உள்ள பிரச்சனை.

பார்ப்பது சலித்துப்போன 80கள் காலகட்ட கதை என்றாலும், ஒரு முக்கிய விஷயத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் விஷால், திரைக்கதையில் மோசமாக சொதப்பியிருக்கிறார். குடும்பத்தினர், பெண்கள் என அனைவரும் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக, முதல் பாதியை காமெடி டிராமாவாக கொண்டு சென்றது ரொம்பவே பொறுமையை சோதித்துவிட்டது.

மகுடம்: திரை விமர்சனம் | Magudam Movie Review

மருந்துக்கு கூட சிரிப்பு வராதபடியான காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. இரண்டாம் பாதியில் வரும் காதல் காட்சிகளை அப்படியே வெட்டியிருக்கலாம். இது மட்டுமல்லாமல் பல லாஜிக் சொதப்பல்கள் வேறு அப்பட்டமாக தெரிகின்றன. ஜி.வி.பிரகாஷ் தன்னால் முடிந்தவரை பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.

திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் பிரமாதம். குறிப்பாக இடைவேளையில் வரும் சண்டைக்காட்சியில் விஷால் தூள் கிளப்பியுள்ளார். பிரமோஷன்களில் காட்டப்பட்ட லிங்கா என்ற வயதான கதாபாத்திரம் குறைந்த நேரமே வருவது ஏமாற்றம்.

மகுடம்: திரை விமர்சனம் | Magudam Movie Review

நிறைய க்ளோஸ்அப் ஷாட்கள் இருப்பது உறுத்தல். நடிகர்களைப் பொறுத்தவரை அஞ்சலி ஆவேசமான காட்சியில் ஒன்றில் அசத்தியிருக்கிறார். துஷாரா, ஜான் விஜய் போன்றோர் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

தம்பி ராமையா காமெடி என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார். ஜெயபிரகாசிற்கு ஏன் இப்படி ஒரு கதாபாத்திரம் என்று கேட்கத் தோன்றுகிறது. படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த் கண்டிப்பாக 30 நிமிட காட்சிகளை நீக்கியிருக்கலாம். ரிச்சர்ட் நாதன், அபிநந்தன், ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

க்ளாப்ஸ்

விஷால்

சண்டைக்காட்சிகள்

பின்னணி இசை

பல்ப்ஸ்

லாஜிக் மீறல்கள்

திரைக்கதை

படத்தின் நீளம்

மொத்தத்தில் இந்த மகுடம் வெண்கல கிரீடம். 

மகுடம்: திரை விமர்சனம் | Magudam Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US