இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யாரென்று தெரிகிறதா?
தென்னிந்தியளவில் எந்த முன்னணி நடிகரின் அரிதான சிறுவயது புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் தீயாய் பரவி வரும்.
அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் மகேஷ் பாபுவின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் இந்த புகைப்படம் அவரின் தந்தையுடன் அவர் சிறுவயதில் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். இன்று ஆசிரியர்கள் தினம் என்பதால் தனது அப்பாவே தனக்கு வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களை கற்று கொடுத்ததாக மகேஷ் பாபு தெரிவித்து இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
நடிகர் மகேஷ் பாபு தற்போது Sarkaru Vaari Paata என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.