மீண்டும் வருகிறாரா காந்தி மகான்.. எதிர்பார்பில் ரசிகர்கள்!!
மகான்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான மகான் திரைப்படம் நேரடியாக OTT - தளத்தில் வெளியானது. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்திருப்பார்.
மேலும் முக்கியமான ரோலில் சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை இப்படத்தின் வெற்றிக்கு பெரும் பக்கபலமாக இருந்தது.
எதிர்பார்பில் ரசிகர்கள்!
தற்போது மகான் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவேறியுள்ள நிலையில், மகான் பார்ட் 2 ? என்று விக்ரம் பதிவிட்டு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
விக்ரம் அவரது 62 வது பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின்னர் மகான் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mahaan2!!? ? pic.twitter.com/HTB3uyMtMm
— Vikram (@chiyaan) February 11, 2024

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
