மகான் திரைப்படத்தில் பாபி சிம்ஹாவுக்கு பதிலாக நடிக்கவிருந்த சூப்பர் ஸ்டார் நடிகர் ! யார் தெரியுமா?
சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மகான்.
நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான இப்படம் விக்ரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மேலும் இப்படம் குறித்து திரையுலகை பல நட்சத்திரங்களும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
அதன்படி சமீபத்தில் கூட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை பார்த்துவிட்டு பாராட்டியாக பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது குறித்து சுவாரஸ்யமான தகவல்களை கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அப்போது முதலில் பாபி சிம்ஹாவின் சத்யவான் கதாபாத்திரத்தில் நடிக்க வேற்றோரு முக்கிய நடிகரை அணுகியது குறித்து பேசியுள்ளார்.
ஆம், பாபி சிம்ஹாவின் சத்யவான் கதாபாத்திரத்தை முதலில் கன்னட திரையுலகின் டாப் நடிகரான சிவ ராஜ்குமாரிடம் சொல்லியிருந்தாராம். அவருக்கும் கதை பிடித்து போக மகான் படத்திற்கு ஓகே கூறியுள்ளார்.
ஆனால் பின்னர் சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். பின் அவருக்கு பதிலாக தான் பாபி சிம்ஹவை தேர்வு செய்துள்ளார் கார்த்திக் சுப்ராஜ்.