விக்ரமின் மஹான் ரிலீஸ் அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கி வரும் படம் மஹான். சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர்.
பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமீபத்தில் தகவல் பரவி இருந்தது. இந்த மாத இறுதியில் அமேசான் ப்ரைமில் படம் நேரடியாக வரும் என தெரிகிறது.
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் படத்தின் ரிலீஸ் பற்றி பேசி இருக்கிறார். "எங்கள் படம் மஹான் ரெடி ஆகிவிட்டது, விரைவில் ரிலீஸ் ஆகும்" என தெரிவித்து உள்ளார். "Our film #Mahaan is all ready and delivered..... Will be released very Soon..... Can't wait to show the film to you all.... Release updates and Promotions on the way Sooner!" என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் தற்போது சென்சார் முடிந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. படம் 2 மணி 43 நிமிடம் ரன் டைம் என்கிற தகவலும் வந்திருக்கிறது.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri