மகான் திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீது மட்டும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
இவர் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று நினைப்பார்கள், அப்படி ஒரு நடிகர் தான் விக்ரம், அவரின் நடிப்பில் அமேசான் ப்ரேமில் வெளிவந்த மகான் எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
விக்ரம் சிறு வயதிலிருந்தே ஒரு மகனாக வளர வேண்டும் என அவருடைய தந்தை நினைக்கின்றார், அதற்கு ஏற்றார் போலவே விக்ரமின் குடும்பமும் அமைகிறது.
சிம்ரன் விக்ரமின் மனைவி, ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக வர, ஆனால், விக்ரமிற்கு இந்த நேர்மையான வாழ்க்கை துளிக்கூட பிடிக்கவில்லை.
ஒருநாள் நமக்கு பிடித்தது போல் வாழ வேண்டும் என்று நினைக்க, வீட்டில் எல்லோரும் திருப்பதி சென்ற நேரத்தில் யதார்த்தமாக பாபி சிம்ஹாவை சந்தித்து குடிக்க ஆரம்பிக்க, அடுத்த நாள் இது சிம்ரனுக்கு தெரிய வருகிறது.
உடனே அவரோ ஒரு நாள் குடித்தாலும் உன்னுடன் வாழ மாட்டேன் என்று மகனை அழைத்துக்கொண்டு வேறு ஊருக்கு செல்கிறார், அதன் பிறகு விக்ரம் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த விஷயங்களே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விக்ரம் நீண்ட நாட்களுக்கு பிறகு ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார், அம்பியாக முதல் அரை மணி நேரம் வந்தாலும், பாபி சிம்ஹா நட்பு கிடைத்தவுடன், அவருடன் சேர்ந்து சரக்கு சாம்ராஜியத்தை அவர் நிலை நாட்ட போடும் திட்டமெல்லாம் சரவெடி. வளர்த்த கெட மார்பில் பாய்வது போல் விக்ரமின் ஆட்டத்தை அடக்க துருவ் விக்ரம் வந்து நிற்பது ஆட்டம் பரபரப்பாகிறது.
ஆனால் முதல் பாதியில் விறுவிறுப்பாக சென்றாலும் அப்பா-மகன் ஆட்டம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் நிதானமாகவே செல்கிறது. துருவ் விக்ரமிற்கு கேரக்டர் கொஞ்சம் சூட் ஆகவில்லை என்றாலும், அவரின் குரல் அந்த கேரட்டருக்கு கம்பீரத்தை கொடுக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் தான் ஒரு தீவிர ரஜினி, டொரண்ட்டினோ, மார்டின் சாகர்ஸி ஆகியோரின் தீவிர ரசிகர் என்பதை நிருபிக்கின்றார்.
தளபதி படம் ரஜினி-மம்முட்டி போல் விக்ரம், பாபி சிம்ஹாவை காட்ட முயற்சி செய்துள்ளனர், ஏதோ எமோசஷ்னல் பெரிதாக கனேக்ட் ஆகவில்லை. விக்ரம் துப்பாக்கியில் சுடுவது எல்லாம் டொரண்டினோ ஸ்டைல், அதற்கு சந்தோஷ் நாரயணன் இசையும் துணை நிற்கின்றது. ஒளிப்பதிவும் அசத்தல்.
க்ளாப்ஸ்
நடிகர்களின் பங்களிப்பு, குறிப்பாக விக்ரம், நீண்ட நாட்களுக்கு பிறகு மிகச்சிறந்த நடிப்பு.
படத்தின் பின்னணி இசை, டெக்னிக்கல் விஷயங்கள்
படத்தின் முதல் பாதி
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்லும் திரைக்கதை.
மொத்தத்தில் அப்பா-மகன் ஆட்டம் கொஞ்சம் நிதானம் என்றாலும் ரசிகர்களுக்கு திருப்தி தான்.
2.75/5

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

சிஎஸ்கே-வை துவம்சம் செய்த அஸ்வின்! மார்பில் குத்தி கொண்டு தோனி படையை வெறுப்பேற்றி கொண்டாடிய வீடியோ News Lankasri

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri

அடிக்கடி கள்ளக்காதலனுடன் உல்லாசம்..கணவனுக்கு சாப்பாட்டில் மாத்திரை கலந்து கொடுத்து கொன்ற மனைவி..! IBC Tamilnadu

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! Manithan

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல் News Lankasri
