மகான் படத்தை பார்த்த தளபதி விஜய் ! முக்கிய பிரபலத்திடம் படம் குறித்து அவர் சொன்ன விஷயம்..
சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மகான்.
அப்பா மற்றும் மகன் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் நடிப்பில் மிரட்டியிருந்தனர்.
இந்நிலையில் மகான் திரைப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் "விஜய் சார் மகான் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருந்ததாக தயாரிப்பாளர் லலித்திடம் சொன்னார்" என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் மகான் படத்தை பார்த்துவிட்டு ரஜினி போன் செய்து வாழ்த்தியது குறித்தும் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.