மகாபாரதம் தொடரில் கிருஷ்ணருக்கு டப்பிங் கொடுத்ததே இந்த சீரியல் நடிகர் தானா?
மகாபாரதம்
தமிழ் மக்கள் பலருக்கும் பிடித்த கடவுள் கண்ணன். இவரது வரலாறு கதைகளை கேட்க பலரும் ஆசைப்படுவார்கள். இவர் இருக்கும் கதைகளில் மிகவும் முக்கியமானது மகாபாரதம். இந்த கதையை வைத்து நிறைய சீரியல்கள் போல் வந்தவிட்டன.
கடந்த சில வருடங்களுக்கு முன் ஹிந்தி நடிகர்களை வைத்து மகாபாரத கதை உருவானது, இந்த தொடர் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது.
கிருஷ்ணன் டப்பிங்
அதில் கிருஷ்ணருக்கு தமிழில் டப்பிங் கொடுத்தது பிரபல சின்னத்திரை நடிகர் தானாம். அவர் வேறுயாரும் இல்லை ஈரமான ரோஜாவே தொடரில் தற்போது நடித்துவரும் தசரதி அவர்கள் தானாம்.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் நல்ல குரல், அருமையாக பேசியிருப்பார் என பாராட்டி வருகிறார்கள். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என்ற தொடரில் நடித்து வருகிறார்.
கர்ப்பமாக இருக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் சந்திரா- வெளிவந்த அழகிய புகைப்படங்கள்