பலகோடி மோசடி வழக்கில் சிக்கிய ரவீந்தர்.. நடிகை மஹாலக்ஷ்மி என்ன கூறியிருக்கிறார் பாருங்க
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்துகொண்டதால் வைரல் ஆனவர். அவர் தமிழ் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார்.
ரவீந்தர் பண மோசடி வழக்கில் சிக்கி ஏற்கனவே சிறைக்கு சென்று ஜாமினில் வெளியில் வந்தவர். தற்போது மீண்டும் ஒரு மோசடி வழக்கில் சிக்கி இருக்கிறார்.
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என சொல்லி மும்பையை சேர்ந்த ஜெகதீஸ் கபூர் என்பவரிடம் 5.24 கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கிறது. அந்த வழக்கில் ரவீந்தரின் நண்பர் கைதான நிலையில், அந்த பணத்தை அவர் ரவீந்தருக்கு தான் அனுப்பி இருக்கிறார் என்பதால் ரவீந்தரையும் கைது செய்ய மும்பை போலீசார் வந்தனர்.
ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி ரவீந்தர் சான்றிதழ் கொடுத்ததால் அவரை அடுத்த வாரம் ஆஜராக சம்மன் கொடுத்து இருக்கின்றனர்.
மஹாலக்ஷ்மி பதிவு
இந்நிலையில் நடிகை மஹாலக்ஷ்மி தற்போது இந்த விவாகாரம் பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
"எங்களுக்கு உண்மை தெரியும், அது தான் மிகவும் முக்கியம். நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம், டிராமா செய்வதை விட அமைதியை விரும்புகிறோம்."
"முழு கதை என்ன என்பதை தெரிந்துகொள்ளாமல் எங்களை பற்றி முடிவு செய்யாதீர்கள். உண்மை விரைவில் வரும். நாங்கள் ஆரோகியமாக, பாசிட்டிவ் ஆக, நிஜமாகவே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்" என மஹாலஷ்மி பதிவிட்டு இருக்கிறார்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
