விஜய்க்கு தெரியவந்த காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயம்- மகாநதி சீரியல் சந்தோஷமான புரொமோ
மகாநதி சீரியல்
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் விஜய் தொலைக்காட்சியில் நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பானது.
அவர்களின் தயாரிப்பில் தற்போது இளசுகளின் மனதை கவர்ந்த ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறழ மகாநதி. பிரவீன் பென்னட் இயக்கத்தில் அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
புரொமோ
கதையில் வெண்ணிலா விஷயத்தில் விஜய் முக்கிய முடிவு எடுக்கட்டும், அதற்கு நான் ஒரு தடையாக இருக்க கூடாது என காவேரி தள்ளியே உள்ளார். வெண்ணிலா மாமாவை தேடுவதற்காக விஜய் சென்றுள்ளார்.
இன்னொரு பக்கம் காவேரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் தவித்து வருகிறார், அவரது குடும்பத்தினர் கங்காவின் கர்ப்பத்தை அறிந்து சந்தோஷத்தில் உள்ளனர்.
தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், விஜய்யிடம் வீட்டு ஓனர் மாமி பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை வரப்போகிறது அவர்கள் சந்தோஷமாக உள்ளனர் என கூறுகிறார். இதனால் விஜய், காவேரி நம்மிடம் சொல்ல வந்த சந்தோஷ செய்தி இதுதானா என சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்.
இதோ அந்த புதிய புரொமோ,