கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறிய காவேரி, அதிர்ச்சியில் சாரதா... மகாநதி பரபரப்பு புரொமோ
மகாநதி சீரியல்
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர்கள் இப்போது சீரியல்கள் மூலமாகவும் டிஆர்பியை அதிகரித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு விதமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அப்படி இளைஞர்கள் அதிகம் ரசித்து பார்க்கும் ஒரு தொடராக உள்ளது மகாநதி சீரியல்.
4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் தொடரில் இப்போது முக்கிய கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.
புரொமோ
விஜய்யின் பாட்டி மற்றும் சித்தி காவேரியிடம் விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என ஒரு முடிவோடு உள்ளார்கள். இன்றைய எபிசோடில், காவேரியிடம் விவாகரத்தில் கையெழுத்து போட பாட்டி கேட்க அவர் விஜய்யிடம் கேட்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
பாட்டி நாளை வருவேன் கையெழுத்து போட வேண்டும் என கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.
தற்போது வந்துள்ள புரொமோவில், சாரதா காவேரியிடம் ஏன் கையெழுத்து போட மறுக்கிறாய் என கோபமாக கேட்க காவேரி தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறிவிடுகிறார்.
இதோ அந்த பரபரப்பு புரொமோ,

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
