புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள மகாநதி சீரியல் நடிகை தாரு... எந்த தொடர் தெரியுமா?
மகாநதி
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக அமைந்தது தான் மகாநதி. குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் இந்த சீரியல் 4 சகோதரிகளின் கதையாக ஒளிபரப்பாகி வந்தது.
கொஞ்சம் புதியதாக தொடர் கதைக்களம் செல்ல ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்தார்கள். இடையில் கதையில் விஜய்-காவேரி கதாபாத்திர காட்சிகள் சூப்பராக அமைய தொடருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.
கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 3 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சீரியலும் முடிவுக்கு வந்தது.

புதிய தொடர்
இந்த மகாநதி சீரியலில் 2 பேர் மாறிய பிறகு கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் தாரு ஹெப்சிபா.
இந்த தொடரை தாண்டி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிங்கப்பெண்ணே சீரியலிலும் நடித்து வந்தார், ஆனால் பாதியிலேயே சீரியலில் இருந்து வெளியேறினார்.

இப்போது மகாநதி சீரியல் முடித்த கையோடு புதிய தொடரில் கமிட்டாகியுள்ளார். வரும் திங்கள் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காதல் காதல் காதல் தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
ஆனால் என்ன கதாபாத்திரம் என்பது எல்லாம் தெரியவில்லை.