தனது மகளை முதன்முறையாக சந்திக்கப்போகும் காவேரி... மகாநதி சீரியல் புதிய புரொமோ
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் இளசுகள் விரும்பி பார்க்கும் ஒரு சீரியலாக மகாநதி உள்ளது.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த தொடர் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. பசுபதி மகன் ராகவ், விஜய் காவேரியை கொலை செய்ய முடிவு செய்து விபத்து ஏற்படுத்தினார்.

அதில் காவேரிக்கு எல்லா மறந்து போக குழந்தையை ஆபரேஷன் செய்து எடுத்துவிட்டார்கள். விஜய்யிடம் அவரது குடும்பத்தினர் காவேரி இறந்துவிட்டார் என கூறி குழந்தைக்காக வாழு என சமாதானம் செய்கிறார்கள்.
இன்றைய எபிசோடில், விஜய் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடுகிறார். சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு சென்றுவிட்டார், பாட்டி இறந்துவிடுகிறார். காவேரி குடும்பமும் கொடைக்கானலுக்கு செல்லவில்லை.

புரொமோ
தற்போது மகாநதி சீரியலின் புதிய புரொமோவில், காவேரி தனக்கு பெரிய பள்ளியில் வேலை கிடைத்துள்ளதாக கூறுகிறார். இன்னொரு பக்கம் விஜய் தனது மகளை பள்ளிக்கு அனுப்ப போகிறேன் என கூறுகிறார்.

விஜய் தனது மகளுக்கு காவேரி என்றே பெயர் வைத்துள்ளார். விரைவில் இரண்டு காவேரியின் சந்திப்பு நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.