அப்பா செய்த துரோகத்தை நினைத்து காவேரி விஜய்யிடம் கேட்ட கேள்வி... மகாநதி சீரியல்
மகாநதி சீரியல்
மகாநதி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 4 சகோதரிகளின் கதை.
கடந்த சில மாதங்களாக எல்லா பிரச்சனைகளும் முடிந்து விஜய்-காவேரி இணைவார்களா என்ற கேள்வி இருந்தது, அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களம் சென்றது. அவர்கள் எப்படியோ சாரதா ஏற்றுக்கொள்ள இருவரும் இணைந்துவிட்டார்கள்.
அதன்பின் கங்கா வளைகாப்பு, காவேரி வளைகாப்பு தனித்தனியாக நடந்து முடிந்தது. ஒரு நிகழ்ச்சி முடிவதற்குள் அடுத்த பிரச்சனையும் ஆரம்பமானது.

புரொமோ
அதாவது சாரதாவின் கணவர் கத்தாரில் இன்னொரு திருமணம் செய்து ஒரு மகன் மற்றும் மகள் பெற்றுள்ளார். சாரதா, காவேரிக்கு வீட்டை எழுதித் தர கொடைக்கானலுக்கு வர அங்கு தான் தனது கணவருக்கு இன்னொரு குடும்பம் இருந்தது தெரிய வருகிறது.

அவர்கள் இந்த வீட்டில் எங்களுக்கும் பங்கு உள்ளது என கூற சாரதா இது என் பிள்ளைகளுக்கு மட்டுமே சொந்தமானது என போராடுகிறார். கணவர் இப்படி துரோகம் செய்தது நினைத்து தனது மாமியாரை கேள்வியாக கேட்டு தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.
தனது கணவரின் போட்டோவை எல்லாம் உடைத்து கதறுகிறார். அதனை பார்த்த காவேரி எப்படி இவ்வளவு நல்ல மனைவிக்கு துரோகம் செய்ய முடிந்தது.

இப்படி ஒரு சூழ்நிலை உங்களுக்கு இருந்தால் நீங்களும் எனக்கு துரோகம் செய்வீர்களா என காவேரி கேட்க விஜய் எல்லா ஆண்களும் ஒரே மாதிரி என்று சந்தேகப்படாதே என்கிறார். இதோ லேட்டஸ்ட் புரொமோ,
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri