காவேரி பற்றி நிவின் சொன்ன விஷயம், செம சந்தோஷத்தில் விஜய்... மகாநதி சீரியல் புரொமோ

By Yathrika Jun 17, 2026 01:32 PM GMT
Report

மகாநதி 

கங்கா, காவேரி, யமுனா, நர்மதா என 4 அழகிய சகோதரிகளின் கதையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி.

பிரவீன் பென்னட் இயக்கத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியல் இப்போது முடிவுக்கு வரப்போகிறது என்பது ரசிகர்களுக்கு வேதனையான செய்தியாக உள்ளது. ஆரம்பத்தில் சகோதரிகளின் வாழ்க்கை கதையாக இருந்தது போக போக விஜய்-காவேரி ஜோடியின் காதல் கதையாக மாறிவிட்டது. 

காவேரி பற்றி நிவின் சொன்ன விஷயம், செம சந்தோஷத்தில் விஜய்... மகாநதி சீரியல் புரொமோ | Mahanadhi Serial 17Th To 19Th June 2026 Promo

எந்த விருது விழா எடுத்தாலும் காவேரி-விஜய் ஜோடிக்கு தான் சிறந்த ஜோடிக்கான விருது கிடைக்கும், இனி அந்த ஜோடி வரப்போவதில்லை என நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது என ரசிகர்கள் புலம்பி தள்ளுகிறார்கள்.

சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது, அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் நிறைய வெளியாகி இருந்தது.

புரொமோ

தற்போது மகாநதி சீரியலின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நிவின் விஜய் வீட்டிற்கு வந்து, காவேரி தன்னிடம் சொன்ன விஷயத்தை கூறுகிறார்.

காவேரி பற்றி நிவின் சொன்ன விஷயம், செம சந்தோஷத்தில் விஜய்... மகாநதி சீரியல் புரொமோ | Mahanadhi Serial 17Th To 19Th June 2026 Promo

நானும் அவரை கல்யாணம் செய்யலாம் என தான் யோசிக்கிறேன், ஆனால் முதலில் டேட்டிங் செல்ல வேண்டும் என்கிறார், அந்த விஷயத்தை கேட்ட விஜய் செம சந்தோஷப்படுகிறார்.

பிறகு விஜய்-காவேரி இருவரும் ஒரு ரெஸ்டாரன்டில் சந்திக்கிறார்கள், இனிமேல் மகாநதி சீரியலில் ஒரே கொண்டாட்டம் தான்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US