காவேரி உயிருடன் இருக்கும் விஷயத்தை அறியும் விஜய், ஷாக்கான குடும்பம்.. மகாநதி சீரியல் புதிய புரொமோ
மகாநதி
விஜய் தொலைக்காட்சியில் இளசுகள் அதிகம் நடிக்க இளைஞர்கள் அதிகம் ரசித்துப்பார்க்கும் ஒரு தொடராக உள்ளது மகாநதி சீரியல்.
அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் கதையாக தொடங்கி இப்போது விஜய்-காவேரி என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
சில வாரங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய விஜய்-காவேரியை சுத்தமாக பிரித்துவிட்டார்கள். விஜய்யின் பாட்டி விஜய் நிலை மோசமாக இருக்கிறது அவர் உயிர் பிழைப்பது கஷ்டம் என கூறி காவேரி குடும்பத்தினரை அவர்களின் ஊருக்கே அனுப்பிவிட விஜய்யிடம் காவேரி இறந்துவிட்டதாக கூறிவிடுகிறார்.
பின் 5 வருடங்கள் கழித்து கதை நகர்ந்து வருகிறது.

புதிய புரொமோ
தற்போது சீரியலின் புதிய புரொமோவில், விஜய் தனது மகளிடம் காவேரி புகைப்படத்தை காட்டி இவரைப்போல் உன்னுடைய மிஸ் இருப்பாரா என கேட்க அம்மு இவர்தான் என் மிஸ் என்கிறார்.

இதைக்கேட்டதும் ஷாக் ஆன விஜய் தனது தாத்தாவிடம் காவேரி நிஜமாகவே இறந்துவிட்டாரா என கேட்க தாத்தா ஆமாம் என்கிறார். உடனே விஜய் உண்மையாகவே இறந்துவிட்டால் அப்போது இது யாரு என புகைப்படத்தை காட்ட தாத்தா, சித்தி, சித்தப்பா என அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan