பல போராட்டத்திற்கு பிறகு ஒன்றிணைந்த விஜய் காவேரி, அடுத்து வெடிக்கும் பிரச்சனை... மகாநதி புரொமோ
மகாநதி சீரியல்
விஜய் டிவி, இளைஞர்கள் அதிகம் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியாக உள்ளது.
ரியாலிட்டி ஷோக்கள் மூலம் இளைஞர்களை பிடித்த தொலைக்காட்சி இப்போது சீரியல்கள் மூலம் அதிக ரசிகர்களை பிடித்து வருகிறார்கள்.
குடும்பங்கள் கொண்டாடும் விதமாக, படிப்பின் முக்கியத்துவத்தை சொல்லும் கதையாக, காதலை மையப்படுத்திய கதை என நிறைய கதைக்களத்தில் தொடர்கள் பல ஒளிபரப்பாகிறது.
புரொமோ
அப்படி Youngsters அதிகம் நடிக்க காதல் ததும்ப வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த கதையில் கடந்த சில மாதங்களாக விஜய்-காவேரி பிரச்சனை தான் முக்கியமாக ஒளிபரப்பாகி வந்தது.
எப்படியோ ஒருவழியாக அவர்கள் இணைந்துவிட இப்போது புதிய புரொமோ வந்துள்ளது. அதில் சாரதா, விஜய்க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து எல்லா விஷயங்களையும் செய்ய கங்கா முகம் மாறுகிறது.
இப்படியே போனால் கண்டிப்பாக காவேரி-கங்கா பிரச்சனை அடுத்து வெடிக்கும் என தெரிகிறது. இதோ புரொமோ,