புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.
இப்போது கதையில் வெண்ணிலா எப்போது விஜய்யை விட்டு விலகுவார், எப்போது காவேரி விஜய்யுடன் இணைவார் என்பதை காண தான் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
புதிய சீரியல்
இந்த மகாநதி சீரியல் மூலம் சின்னத்திரை நடிகர்களில் டாப் நாயகனாக உயர்ந்துள்ள சுவாமிநாதன் குறித்து ஒரு சூப்பர் தகவல் வீடியோவுடன் வந்துள்ளது.
அதாவது சுவாமிநாதன், தெலுங்கில் புதிய சீரியல் கமிட்டாகி நடித்துள்ளார். ஆட்டோ விஜயசாந்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் நாயகியாக நீ நான் காதல் சீரியல் புகழ் வர்ஷினி தான் நடிக்கிறார்.
இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வீரா தொடரின் ரீமேக் என கூறப்படுகிறது. இதோ புதிய சீரியலின் புரொமோ,