விஜய் டிவியின் மகாநதி சீரியல் நடிகர்களின் நிஜ வயது எவ்வளவு தெரியுமா?
மகாநதி சீரியல்
மகாநதி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளசுகள் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல்.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் புதிய முகங்கள் பலர் களமிறங்கிய இந்த தொடர் இப்போது ரசிகர்களின் பேவரெட் சீரியலாக வலம் வருகிறது.

இதுநாள் வரை விஜய்-காவேரி ஒன்றாக இணைவார்களா என எதிர்ப்பார்த்து இருந்து வர எப்படியோ இணைந்தார்கள்.
அதன்பின் கொஞ்சம் பிரச்சனை இல்லா கதைக்களம் அமையுமா என்று பார்த்தால் அப்படி இல்லை. சாரதா கணவரின் 2வது மனைவி மற்றும் மகள், மகன் என குடும்பம் வர மகாநதி சீரியலில் பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.
இந்த பிரச்சனையில் இருந்து சாரதா எப்படி வெளியே வரப்போகிறார் என தெரியவில்லை.

வயது
சீரியலில் விறுவிறுப்பான கதைக்களம் சென்று கொண்டிருக்க இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களின் வயது என ஒரு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த விவரங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, இதோ பாருங்கள்,
- குமரன்- 29 வயது
- கங்கா- 26 வயது
- நிவின்- 29 வயது
- நர்மதா- 27 வயது
- விஜய்- 30 வயது
- காவேரி- 28 வயது
- சாரதா- 58 வயது
- ராகினி- 30 வயது