அந்த காரணத்தால் மகாநதி சீரியலில் இருந்து விலக முடிவு எடுத்த பிரபலம்... யாரு, என்ன ஆச்சு?
மகாநதி சீரியல்
இளம் கலைஞர்கள் பலர் நடிக்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கை பயணத்தை கொண்ட தொடராக உள்ளது.
இத்தனை நாட்களாக விஜய்-காவேரி இணைவார்களா என்ற கதைக்களம் இருந்து வந்தது, ஆனால் கடந்த வார எபிசோடுகளில் இணைந்துவிட்டார்கள்.
அடுத்து சாரதாவின் கொடைக்கானல் வீட்டை பசுபதியிடம் இருந்து மீட்க அவரது மருமகன்கள் பிளான் போட்டுள்ளனர்.
விலக முடிவு
இந்த தொடரில் ராகினி என்ற வில்லி கதாபாத்திரத்தில் ஷாதிகா நடித்து வருகிறார்.
அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், இந்த சீரியல் கமிட்டாகும் போது இது இவ்ளோ பெரிய நெகட்டீவ் ரோல் என்று தெரியாது. மோசமா திட்டினார்கள், திடீரென அவ்ளோ வெறுப்பு பார்க்கும் போது பயந்தேன்.
இது நமக்கு செட் ஆகுமா இல்லையா என்று குழப்பம் இருந்தது. விமர்சனங்கள் படித்துவிட்டு பிரவீன் சாரிடம் சீரியலில் இருந்து விலகுவதாக சொன்னேன். அவர் கமென்ட்லாம் படிக்காதீங்க, ஃப்ரீயா விடுங்க என்று சொன்னதாக ஷாதிகா கூறியுள்ளார்.