மகாநதி சீரியலில் நடிக்கும் காவேரி இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?- யாரெல்லாம் கவனித்தீர்கள்?
மகாநதி
விஜய் தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஆஹா கல்யாணம் என நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
ஒவ்வொரு சீரியலுக்கும் தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது, அப்படி மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் மகாநதி. தந்தையை இழந்த 4 சகோதரிகள் பற்றிய கதையாக ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது மகாநதி-ஆஹா கல்யாணம் தொடர்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது.
காவேரி யார்
மகாநதி தொடரில் காவேரி கதாபாத்திரத்தில் நடிக்கும் லட்சுமி ப்ரியாவிற்கு ரசிகர்கள் கூட்டம் சீரியல் மூலம் அதிகமாகி உள்ளனர்.
அவரது நிஜ பெயர் லட்சுமி ப்ரியா, மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு காலேஜ் படிப்பை முடித்ததும் முழு நேரமாக மாடலிங் துறையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
அதோடு மிஸ் மிராக்கி 2018 என்னும் அழகிப்போட்டியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வாகி இருக்கிறார்.
மாடலிங் துறையில் கவனம் செலுத்திக் கொண்டே திரிஷாவுடன் ரோட், சிம்புவின் பத்து தல, ட்ரிப் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறாராம்.