விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல்
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி.
பிரவீன் பென்னட் இயக்கத்தில் 4 சகோதரிகளின் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ரசிகர்கள் முக்கிய கதாபாத்திரமாக பார்க்கும் ரசிகர்கள் பார்க்கும் விஜய்-காவேரி சுற்றிய கதையாகவே இப்போது உள்ளது.

விஜய்க்கு காவேரி உயிருடன் இருக்கும் விஷயம் இப்போது தான் தெரிய வந்துள்ளது, தாத்தா, சித்தி, சித்தப்பா என 3 பேரும் மொத்த உண்மையையும் கூறிவிட்டனர்.
இதனால் கோபப்பட்ட விஜய் இனி யாரும் என்னிடமும் என் மகளிடமும் பேச வேண்டாம் என கூறுகிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், விஜய் தனது காவேரியை 5 வருடங்களுக்கு பிறகு சந்தித்ததும் சந்தோஷப்படுகிறார். காவேரி முன் சென்று நிற்க அவரோ அம்முவின் அப்பா தானே இப்போது குழந்தை எப்படி உள்ளார், மருத்துவமனை அழைத்த சென்றீர்களா என கேட்கிறார்.

உடனே விஜய் காவேரியிடம் பேச தவிக்க திடீரென சாரதா பள்ளி குழந்தையின் அப்பா என்றால் நேராக வீட்டிற்கு வந்துவிடுவீர்களா என கோபமாக பேசி அனுப்புகிறார். பின் விஜய் அங்கிருந்து கிளம்ப சாரதா அவரை தேடி மீண்டும் வருகிறார்.
அவரை சந்தித்து மன்னிப்பு கேட்கிறார், நீங்கள் திடீரென ஏதாவது கூறிவிட்டால் காவேரிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று தான் நான் தடுத்தேன் என்கிறார்.
பின் சாரதா 5 வருடங்களுக்கு முன் நடந்த எல்லா விஷயத்தையும் விஜய்யிடம் கூற அவரும் தனது குடும்பத்தினர் தன்னிடம் கூறிய விஷயங்களை சாரதாவிடம் கூறுகிறார். இன்றைய எபிசோடில் எல்லா உண்மையும் இருவருக்கும் தெரிய வருகிறது.
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri