ஜெயிலுக்கு செல்லும் விஜய்? காவேரி செய்த விஷயம்! மகாநதி சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்
மகாநதி
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மகாநதி. இந்த சீரியலின் பரபரப்பான அடுத்தகட்டம் குறித்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ஜெயிலுக்கு செல்லும் விஜய்
இதில், வெண்ணிலவை மாடியில் இருந்து தள்ளிவிட்டது யார் என்பது குறித்து போதுமான ஆதாரம் இல்லை என்பதால், குற்றவாளி விஜய்தான் என நீதிமன்றம் முடிவு செய்துவிட்டது.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் அதிரடியாக விஜய்யின் மனைவி காவேரி என்ட்ரி தருகிறார். மேலும் வெண்ணிலாவை நீதி மன்றத்திற்கு அழைத்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.
இதன்பின் பேசிய வெண்ணிலா தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டது விஜய் இல்லை பசுபதி தான் என கூறிவிட்டார்.
இதன்மூலம் ஜெயிலுக்கு செல்லவிருந்த நிரபராதி விஜய் காப்பாற்றப்பட்டுள்ளார். பல போராட்டங்களை கடந்து தனது கணவர் விஜய்யை காவேரி காப்பாற்றியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ..