அடுத்த வாரம் விஜய் டிவியின் மகாநதி சீரியலில் இப்படியொரு கதைக்களமா?... வைரலாகும் போட்டோ
மகாநதி
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.
கடந்த ஜனவரி 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 490 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கும் இந்த தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
கதைக்களம்
தற்போது கதையில் காவேரி-விஜய்-வெண்ணிலா பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய், வெண்ணிலாவை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்வது காவேரியை மிகவும் கஷ்டப்படுத்தி வருகிறது.
அதை விஜய் புரிந்துகொண்டாலும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார். இந்த நேரத்தில் மகாநதி சீரியலின் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் சகலைகலாக இருந்த குமரன் மற்றும் விஜய் சண்டை போடுவது போன்றும் அவர்களை நிவின் தடுப்பது போல ஒரு புகைப்படம் வலம் வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் என்னபா நல்லா தானே கதை சென்று கொண்டிருக்கிறது என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.