கங்கா செய்த வேலையால் அதிரடி முடிவு எடுத்த குமரன், துணையாக நின்ற சகலைகள்... மகாநதி எமோஷ்னல் எபிசோட்
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்கள், காதலர்களை கவரும் வண்ணம் ஒரு சூப்பர் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.
இந்த வார எபிசோடில் கங்கா தனக்கு தனியாக வளைகாப்பு வைக்க வேண்டும் என அடம்பிடிக்க அதற்கான வேலைகள் நடந்தது. கங்கா ஒட்டியானம் கேட்டதால் அதை வாங்கிக்கொடுக்க குமரன் பெரிய ஆர்டர் எடுத்த செய்து வந்தார்.
ஆனால் அதை புரிந்துகொள்ளாமல் கங்கா எல்லோரின் முன்பும் குமரனை மோசமாக திட்டிவிடுகிறார். பின் கங்கா, குமரனிடம் மன்னிப்பு கேட்க பிரச்சனை முடிந்தது.
எபிசோட்
இன்றைய எபிசோடில் பசுபதி, காவேரியை காரில் ஏற்றி காலி செய்ய முயற்சி செய்ய விஜய்யால் எப்படியோ தப்பித்தார்.
அவருக்கு இந்த காரியம் பசுபதி தான் செய்தான் என தெரிந்துவிட்டது. அடுத்து வீட்டில் குமரன் நான் ஒரு விஷயம் சொல்லப்போகிறேன் எனக்கு நீங்கள் சப்போர்ட் செய்ய வேண்டும் என விஜய் மற்றும் காவேரியிடம் சொல்கிறார்.
அனைவரிடத்திலும் பெரிய ஆர்டர் கிடைத்துள்ளது நான் மலேசியா செல்ல வேண்டும் என வீட்டில் அனைவரிடமும் கூறி சம்மதம் வாங்குகிறார். நாளைக்கே செல்ல வேண்டும் என கூற கங்கா செம ஷாக் ஆகிறார்.
பின் சகலைகள் விஜய்-நிவின் நீங்கள் சென்றே ஆக வேண்டுமா என எமோஷ்னல் ஆகிறார்கள். 3 சகலைகள் இடம்பெற்ற காட்சிகள் இன்றைய எபிசோடில் மிகவும் எமோஷ்னலாக அமைந்துள்ளது.